மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன தெரியுமா? இனி உஷாரா இருங்க
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் பழங்களில் ராஜா என அழைக்கப்படுகின்றது.
மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும்.
இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ, இரும்பு, தாமிரம் மற்றும் ஏராளமான பொட்டாசியம் ஆகியவை உடலுக்கு மிகச் சிறந்தவை.
இது ஒரு எரிசக்தி உணவாகும், மேலும் உங்கள் உடலுக்கு தேவையான சர்க்கரையை வழங்கி நாள் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
இருப்பினும், மாம்பழத்தை அதிகமாக உட்கொள்வது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே இதனை அளவுடன் உண்ணுவது அவசியமாகும்.
அந்தவகையில் அதிகளவு மாம்பழத்தால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
பக்க விளைவு
- அதிகமாக மாம்பழம் சாப்பிடுவது எடையை அதிகரிக்கும். நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட கலோரி அளவை அதிகமாக சாப்பிடும்போது அது உங்கள் எடையை கண்டிப்பாக அதிகரிக்கும்.
- அளவிற்கு அதிகமாக உட்கொண்டால், அது உங்களுக்கு கடுமையான மலச்சிக்கல் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சினைகளைத் தரும். அதிகப்படியான மாம்பழத்தை சாப்பிடுவதன் மிகப்பெரிய தீமைகளில் இதுவும் ஒன்றாகும்.
- நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் மாம்பழம் அறவே தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். மாம்பழம் சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிரமங்களை அதிகரிக்கும்.
- ஒரு நாளைக்கு பல மாம்பழங்களை சாப்பிடுவது உங்களுக்கு தொண்டைப் புண் மற்றும் தொண்டை தொற்று ஏற்படலாம். எனவே உங்களுக்கு தொண்டை புண் அல்லது தொண்டை தொற்று இருந்தால் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
-
அதிக மாம்பழம் மற்றும் மாம்பழச்சாறு அல்லது சிரப் சாப்பிடுவது உங்களுக்கு மூட்டுவலி வலியை ஏற்படுத்தும் மற்றும் நீங்கள் கீல்வாதம் அல்லது ஏதேனும் யூரிக் அமில பிரச்சனையால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.