வெறும் வயிற்றில் கிரீன் டீயை எடுத்து கொண்டால் இந்த ஆபத்தை ஏற்படுத்துமாம்! எச்சரிக்கையாக இருங்க மக்களே!
கிரீன் டீ எடை குறைப்பு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், உடலின் இயல்பான வெப்பநிலையை சீராக்குவது போன்ற அற்புதமான பண்புகள் கொண்டுள்ள ஒரு பிரபலமான பானமாகும் ஆகும்.
ஆனால், கிரீன் டீயின் அனைத்து ஆரோக்கிய நன்மைகளை பெற சரியான முறையில், சரியான நேரத்தில் குடிக்க வேண்டும்.
சிலர் இதனை வெறும் வயிற்றில் கூட அருந்துகின்றனர்.உண்மையில் இதனை வெறும் வயிற்றில் குடிப்பதனால் பக்கவிளைவுகளை ஏற்படும்.
அந்தவகையில் கிரீன் டீயைக் குடிப்பதற்கு எது சரியான நேரம், வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாமா? எந்த அளவில் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
வெறும் ஏன் வயிற்றில் கிரீன் டீ குடிக்க கூடாது?
காலையில் க்ரீன் டீ குடிப்பது வயிற்றின் சமநிலையை பாதிக்கும். க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வலுவான பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இது வயிற்று அமில உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது உங்கள் உடலின் செரிமான அமைப்பை சீர்குலைத்து, வீக்கம், வாயு போன்றவற்றுக்கு வழிவகுக்கும். கிரீன் டீயை உணவுக்கு இடையில் அல்லது உணவு உண்ட பிறகு எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கிய பலன்களை அடையலாம்.
அதோடு, கிரீன் டீயுடன் சில பிஸ்கட்கள் அல்லது சில சிற்றுண்டிகளை சாப்பிடலாம். ஆனால், அதை வெறும் வயிற்றில் நிச்சயம் குடிக்கவே கூடாது.
மேலும், கிரீன் டீ வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் என்பதால், அதீத ஆர்வம் காரணமாக நாள் முழுவதும் க்ரீன் டீ குடித்துக்கொண்டே இருக்க கூடாது.
நாள் ஒன்றுக்கு எவ்வளவு குடிக்க வேண்டும்?
ஒரு நாளைக்கு 1-2 கப் க்ரீன் டீ குடிப்பது நல்லது.
கிரீன் டீயை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது . ஏனெனில் அதிகப்படியான கிரீன் டீ, வயிற்றில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அல்லது உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும் .எனவே, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கோப்பைகளுக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மேலும், சாப்பிட்ட உடனேயே க்ரீன் டீயைக் குடிக்காதீர்கள். இதன் காரணமாகவும் அமிலத்தன்மை, வீக்கம் ஆகியவை ஏற்படலாம். எனவே, உங்கள் உணவு சாப்பிட்ட 30-45 நிமிடங்களுக்கு பின் கிரீன் டீ அருந்துவது நல்லது.