பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா?
அதிக காய்ச்சல், உடல் வலி அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் கொண்ட நோயாளிகள் பாராசிட்டமால் மாத்திரையை சாப்பிடலாம் என்று மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் பாராசிட்டமால் டெங்கு நோயாளிகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
ஆனால் பாராசிட்டமால் மாத்திரையை நீண்ட நாட்களுக்கு எடுப்பது பல பக்கவிளைவுகளை உண்டாக்கிவிடும்.
which.cp.uk
ஏற்படும் பக்கவிளைவுகள்
தூக்க கலக்கம், சோர்வு, தோலில் தடிப்பு மற்றும் அரிப்பு போன்றவை பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய சில பொதுவான பக்க விளைவுகள்.
பாராசிட்டமால் மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது சோர்வு மூச்சுத் திணறல், விரல்கள் மற்றும் உதடு நீல நிறமாக மாறுதல், ரத்த சோகை, கல்லீரல் மற்றும் சிறுநீரக சேதம் போன்றவை ஏற்படும்.
university if minnesota
மேலும் அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும்.
பாராசிட்டமால் மாத்திரையை அதிக டோசேஜில் சாப்பிடும் பொழுது அடி வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி மற்றும் கோமா ஏற்படலாம்.
எனவே பாராசிட்டமால் மாத்திரைகளை சாப்பிடும் பொழுது ஒருவர் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |