வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா?
ஆரோக்கியமான கரு முட்டையும் ஆரோக்கியமான விந்தணுவும் இணைத்து ஒரு பெண்ணின் கருப்பையில் பொருத்தி கருவை வளரவிடும் நிலையில் கருவின் ஆரோக்கியம் வளர்ச்சி என்பது குழந்தையை சுமக்கும் பெண்ணிடம் தான் உண்டு.
வாடகைத்தாய் என்னும் வேலைக்கே பொருளாதார ரீதியாக பின் தங்கிய பெண்கள் தான் ஒப்புகொள்கிறார்கள்.
இருப்பினும் நடுத்தர மக்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுகொள்ளும் போது கருவின் ஆரோக்கியம் சற்று பாதிக்க வாய்ப்புண்டு.
அந்தவகையில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுகொள்வதிலும் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பிறக்கும் குழந்தைக்கு நோய் உண்டாகலாம்
கர்ப்பகாலத்தில் அப்பெண்ணுக்கு ஏதேனும் நோய்த்தொற்று வந்தால் கர்ப்பகால நோய் பாதிப்பு வந்தால் அது அலட்சியம் செய்யும் போது அல்லது கவனிக்காத போது அது குழந்தையை பாதிக்க செய்யும்.
கர்ப்பகால நீரிழிவு, கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், காச நோய், பால்வினை நோய் போன்றவை கூட குழந்தைக்கு பாதிப்பை உண்டு செய்யலாம்.
குழந்தையின் மன ஆரோக்கியம்
வாடகைத்தாய் பெண் மன ரீதியாக அழுத்தத்தை சந்தித்தால் அது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கவே செய்யும்.
குழந்தை அனாதையாகலாம்
சமயங்களில் வாடகைத்தாய் வயிற்றில் வளரும் குழந்தை உடல் ரீதியாக ஏதேனும் குறைபாட்டை கொண்டு பிறந்தால் கை, கால் ஊனம் போன்ற நிலையில் அந்த குழந்தையை வளர்க்க குழந்தைக்குரியவரும், குழந்தையை சுமந்தவரும் முன் வரமாட்டார்கள். இந்நிலையில் அந்த குழந்தை தனித்து விடப்படலாம்.
குழந்தைக்கு தாய்ப்பால்
குழந்தையை சுமக்கும் பெண் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் இருவருக்கும் நெருக்கம் உண்டாகி அப்பெண்ணே குழந்தையை வைத்துகொள்ள விரும்புவார்கள். இதனால் பிரச்சினைகள் ஏற்படலாம்.