பிரித்தானிய மக்களே எச்சரிக்கை.. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம்! வெளியான அதிர்ச்சி தகவல்
அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு நரம்பு கோளாறு ஏற்படலாம் என்று என்று பிரித்தானிய மருந்து ஒழுக்காற்று அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேல் கடந்த நிலையிலும் அதனின் வீரியம் குறைந்தபாடில்லை. உலக நாடுகள் முழுவதும் வைரஸ் தொற்று அதி வேகமாக பரவி வருகின்றது.
சில நாடுகளில் இரண்டாவது அலையை அடுத்து மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராடும் பேராயுதமாய் தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது.
இதனால் மக்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு உலக நாடுகள் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரித்தானிய மருந்து ஒழுக்காற்று நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு முக்கிய நரம்பை அழிக்கும் கோளாறான Guillain-Barre Syndrome ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய மருத்துவ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்தே இந்த அறிவிப்பை பிரித்தானிய அமைப்பு வெளியிட்டதாக கூறப்படுகின்றது.