திருமணத்தில் இணைந்த பிரபல நடிகை கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா காதல் ஜோடி!
பிரபல இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமணம் ராஜஸ்தானில் கோலாகலமாக நடந்தது.
நீண்ட நாள் காதல்
இந்தி திரையுலகில் பிரபல நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா. 'ஷெர்ஷா' என்ற படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.
அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடி, திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
ராஜஸ்தானில் திருமணம்
இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் பேலஸ் ஹொட்டலில் கியாரா-சித்தார்த்தின் திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது. இவர்களின் திருமணத்தில் 100 பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
வரும் 12ஆம் திகதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த தம்பதி திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கியாரா தனது சமூக வலைதளத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அத்துடன், 'எங்களின் புதிய பயணத்தில் உங்களின் அன்பையும், ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறோம்' என பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தா, நடிகர் ராம்சரணின் மனைவி உட்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் காதல் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.