கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: பலிகடா ஆக்கப்பட்ட நபர்
Defence argues Sidhu was taken advantage of: கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தங்கள் கட்சிக்காரர் பலிகடா ஆக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் புதிய வாதம் ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.
கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சட்டத்தரணிகள் புதிய வாதம் ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.
400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டன.

கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள வேறு சிலர் வந்துள்ளார்கள்.
அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்துள்ளது, ஏற்கனவே வந்த நபர் மோசடியாளர் என்பது. அந்த பார்சல்களில், 6,600 தங்கக் கட்டிகள் இருந்துள்ளன.
400 கிலோ எடையுள்ள அவற்றின் மதிப்பு 22 மில்லியன் டொலர்கள்!
இந்நிலையில், அந்த தங்கக்கட்டிகளை கொள்ளையடிப்பதற்கு உதவியாக போலி ஆவணங்கள் தயாரித்துக் கொடுத்ததாக, முன்னாள் ஏர் கனடா நிறுவன ஊழியரான பர்ம்பால் சித்து (Parmpal Sidhu) என்பவர் தொடர்புடைய வழக்கு ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது.

சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள புதிய வாதம்
தான் குற்றவாளி அல்ல என சித்து தொடர்ந்து கூறி வரும் நிலையில், தற்போது அவரது சட்டத்தரணிகள் புதிய வாதம் ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.
அதாவது, குற்றச்செயலில் ஈடுபட்ட சிம்ரன் பிரீத் பனேசர் என்பவர், சித்துவின் அடையாளத்தை பயன்படுத்தி மோசடி செய்துவிட்டு, தப்பியோடிவிட்டதாக வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பனேசரும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில், கொள்ளை நடந்த சில மாதங்களுக்குப் பின் அவர் தன் குடும்பத்துடன் கனடாவை விட்டு வெளியேறிவிட்டார்.
இந்நிலையில், நீண்ட நாள் நட்பைப் பயன்படுத்தி, பனேசர் தன்னுடன் வேலை செய்த சித்துவின் அடையாளங்களைப் பயன்படுத்தி, தங்கக்கட்டிகளை பெற்றுக்கொள்ள வந்த மோசடியாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கியுள்ளதாக சித்துவின் சட்டத்தரணிகள் வாதம் முன்வைத்துள்ளார்கள்.
ஆக, யாரோ செய்த தவறுக்கு சித்து பலிகடா ஆக்கப்பட்டுவிட்டதாக அவரது சட்டத்தரணிகள் வாதம் முன்வைத்துள்ளார்கள்.