இலங்கைக்கு எதிராக சதம்: தெறிக்கவிட்ட பாகிஸ்தான் வீராங்கனை..274 ஓட்டங்கள் இலக்கு
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் சிட்ரா அமின் சதம் விளாசினார்.
ஆயிஷா, முனீபா
பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹம்பன்டோடாவில் நடந்து வருகிறது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனைகள் சதப் ஷாமஸ் 12 ஓட்டங்களிலும், குல் பெரோஸா 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து கைகோர்த்த சிட்ரா அமின், ஆயிஷா ஜாபர் கூட்டணி இலங்கை பந்துவீச்சை சோதித்தது. அதிரடி காட்டிய ஆயிஷாவை 49 (45) ஓட்டங்களில் கவிஷா வெளியேற்றினார்.
சிட்ரா அமின் சதம்
அடுத்து வந்த முனீபா அலி 45 ஓட்டங்கள் எடுக்க, அணித்தலைவர் ஃபாத்திமா சனா (Fatima Sana) 18 பந்துகளில் 25 ஓட்டங்கள் விளாசினார்.
மறுமுனையில் நிதானமாக ஓட்டங்கள் சேர்த்த சிட்ரா அமின், தனது 7வது ஒருநாள் சதத்தினை பதிவு செய்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ஓட்டங்கள் குவித்தது.
சிட்ரா அமின் ஆட்டமிழக்காமல் 100 (120) ஓட்டங்கள் எடுத்தார். சமரி அதப்பத்து, கவிஷா தில்ஹரி, இனோகா மற்றும் சேத்தனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |