இளவரசர் ஹரியின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய தவறு: கேள்வி எழுப்பும் செய்தியாளர்
இளவரசர் ஹரி தனது புத்தகத்தில் மகாராணியாரின் தாயாரைக் குறித்து தவறான ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஹரியின் புத்தகத்தில் இப்படி பெரும் தவறு இருக்கும் நிலையில், அது நம்பத்தகுந்த புத்தகம்தானா என கேள்வி எழுப்பியுள்ளார் செய்தியாளர் ஒருவர்.
மகாராணியாரின் தாயாரைக் குறித்த தவறான செய்தி
இளவரசர் ஹரி, தன் பாட்டியாரின் தாயார் மரணமடையும்போது, தான் பள்ளியில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அப்போது ஹரிக்கு வயது 17.
Image: CBS
உண்மை என்ன?
ஆனால், உண்மையில் மகாராணியாரின் தாய் மரணமடையும்போது, ஹரி தன் தந்தை சார்லஸ் மற்றும் அண்ணன் வில்லியமுடன் சுவிட்சர்லாந்தில் விடுமுறையை செலவிட்டுக்கொண்டிருந்தார் என்கின்றன செய்திகள். அது 2002ஆம் ஆண்டு. தனது 101ஆவது வயதில் மரணமடைந்தார் மகாராணியாரின் தாயாகிய முதலாம் எலிசபெத்.
அத்துடன், தனது தாயின் சகோதரியான சாரா, தனது 13ஆவது பிறந்தநாளுக்கு Xbox ஒன்றை பரிசளித்ததாக ஹரி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் Xbox வெளியிடப்பட்டதே 2001ஆம் ஆண்டுதான்.
ஆக, ஹரியின் புத்தகத்தில் இப்படி தவறான செய்திகள் இடம்பெற்றுள்ளதால், அது எந்த அளவுக்கு நம்பத்தகுந்த புத்தகம் என கேள்வி எழுப்பியுள்ளார் GB News என்னும் தொலைக்காட்சியின் ராஜ குடும்ப செய்தியாளரான Cameron Walker என்பவர்.
Image: We Love TV