ஜோதிடம்: இந்த அறிகுறிகள் இருந்தால் வீட்டில் கெட்டது நடக்க போகிறதாக அர்த்தமாம்!
வீட்டில் கெட்ட சக்தி எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சில திருஷ்டி விஷயங்களை கடைபிடிக்கிறோம்.
இந்து மதத்தில் கண் திருஷ்டி பட்டால் அனைத்தும் தடை படும் என சொல்கிறது.
இந்த திருஷ்டியை போக்குவதற்காக பலரும் திருஷ்டி கழிப்பு, திருஷ்டி பொம்மைகளை வைத்திருப்பார்கள்.
அந்தவகையில், வீட்டில் சில அறிகுறிகளை கண்டால் அது கெட்டது நடப்பதன் அறிகுறி என சொல்லப்படுகிறது.
வீட்டை சுற்றி அடிக்கடி நாய்கள் அழுவதை கேட்டால், எதிர்மறை சக்தி இருப்பதாக அர்த்தமாம். உடனடியாக நமச்சிவாய மந்திரத்தை உச்சரிப்பது நல்லதாகும்.
வீட்டில் பூஞ்சை இருந்தால், விரைவில் கஷ்டப்பட போகிறீர்கள் என்று அர்த்தமாம். உடனடியாக அதை அகற்றி வீட்டை சுத்தம் செய்வது நல்லதாகும்.
அதிகாலை 3 மணிக்கு அடிக்கடி முழிப்பு வருவது எதிர்மறை ஆற்றலால் சூழ்ந்திருக்கிறீர்கள் என்று அர்த்தமாம். உடனடியாக கடவுளை வணங்கி விட்டு தூங்குவது நல்லதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |