ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது என்னனென்ன அறிகுறிகள் காட்டும் தெரியுமா?
கருட புராணத்தின் படி ஒருவர் இறக்க முன்னர் குறிப்பிட்ட சில அறிகுறிகள் முன்னரே காட்டும் என கூறப்படுகின்றது.
கருட புராணம்
இந்து மதத்தில் பல்வேறு புராணங்கள் உள்ளது, அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று கருட புராணம். இந்த புராணம் மனிதர்கள் வாழும்போதும், வாழ்க்கைக்குப்பிறகும் என்ன நடக்கும் என்பதைப் பற்றி விளக்குகிறது.
அதன்படி ஒவ்வொரு மனிதனும் தனது நல்ல மற்றும் கெட்ட செயல்களின் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும் எனப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு மரணத்திற்கு முன் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதும் இந்தப் புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

கருட புராணம் இந்து மதத்தின் புகழ்பெற்ற புராணங்களில் ஒன்றாகும். பதினெட்டு புராணங்களில், கருட மகாபுராணம் தனக்கென ஒரு தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது.
இது சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம், ஞானம், நீதி, விதிகள் மற்றும் தர்மம் ஆகியவற்றை மக்களுக்கு விளக்குகிறது.
பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான அனைத்து உண்மைகளையும் மக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு, ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் வீட்டில் கருட புராணம் வாசிக்கப்படுகிறது.
அந்த வகையில் ஒருவர் இறப்பதற்கு முன்னர் அவருக்கு முன்கூட்டியே காட்டும் சில அறிகுறிகள் உள்ளது அதை கருட புராணம் விரிவாக கூறி உள்ளது அதை பாக்கலாம்.

மரணத்திற்கு முன் தோன்றும் அறிகுறிகள்
- கருட புராணத்தின் படி, ஒருவரை மரணம் நெருங்குவதற்கு முன் அறிகுறிகள் உடலில் தோன்றும். ஒருவரை மரணம் நெருங்குவது உறுதியாகிவிட்டால் அவர்களால் அவர்களுடைய மூக்கை பார்க்க முடியாது என்று கருட புராணம் கூறுகிறது.
- மரணம் நெருங்கும் போது,ஒருவரால் எண்ணெய் அல்லது தண்ணீரில் தனது நிழலைக் காண முடியாது என்று கருட புராணம் கூறுகிறது. அதனால்தான், மரண நேரத்தில் ஒருவரின் நிழலும் அவரை விட்டுப் பிரியும் என கூறுவார்கள்.
- கருட புராணத்தின் படி இறப்பதற்கு முன் ஒருவரின் கையில் உள்ள ரேகைகள் மிகவும் மங்கலாகிவிடும். சிலருக்கு அவை முற்றிலும் தெரியாமலேயே போய்விடும். இந்த அறிகுறி சில நாட்களுக்கு முன்னர் நடைபெறும்.

- மரணம் ஒருவரை நெருங்கும் போது ஒருவருக்கு சில விசித்திரமான கனவுகள் வரக்கூடும் என்று கருட புராணம் கூறுகிறது. ஒரு நபர் தனது கனவுகளில் அணைந்துபோன விளக்கு போன்ற சில விசித்திரமான விஷயங்களைக் காணத் தொடங்குவார்.
- கருட புராணத்தின் படி, இறப்பதற்கு முன்பு, ஒருவர் தன்னைச் சுற்றி ஆன்மாக்களை உணரத் தொடங்குகிறார். அவை அவரது மூதாதையர்களின் ஆன்மாக்களாக இருக்கலாம்.
- தங்கள் உறவினர் இப்போது மறுவுலகத்திற்கு வரப்போவதால், அவர்கள் அவரது வருகையைக் கொண்டாடத் தொடங்குவார்கள். எனவே தான் இறந்தவர்களின் ஆன்மா இறக்க முன்னர் கண்களுக்கு தெரியும்.

கருட புராணத்தின்படி, ஒருவர் இறப்பதற்கு முன்பு, அவரது சுவாசம் எதிர் திசையில் செல்லத் தொடங்குகிறது. மேலும் அவர் எம தூதர்களை மிகவும் அருகில் பார்ப்பதால், தன்னைச் சுற்றியுள்ளவர்களை அவரால் பார்க்க முடியாமல் போகலாம். இதுபோன்ற அறிகுறிகள் ஒரு மனிதன் இறக்க முன்னர் அவனுக்கு காட்டும் எனப்படுகின்றனது.