கனடாவில் இன்னொரு சீக்கிய தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல்: அதிகாரிகள் எச்சரிக்கை
கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலைக்கு பின்னர், அவருக்கு மிக நெருக்கமான இன்னொரு தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் படுகொலை செய்யப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜருக்கு மிக நெருக்கமானவர் Gurmeet Singh Toor. தற்போது இவரது உயிருக்கு அச்சுறுத்தல் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
@reuters
புதன்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், சர்ரே பொலிசார் தங்களுக்கு கிடைத்துள்ள உளவுத்துறை தரவுகளின் அடிப்படையில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அச்சுறுத்தல் விவகாரத்தை பொதுமக்கள் தெரிந்துகொள்வது அவசியம் என தாம் கருத்துவதாக தூர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, பொலிஸ் தரப்பில் இருந்து பலமுறை தம்மை தொடர்பு கொண்டுள்ளதாகவும் தூர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தால்
மட்டுமின்றி, தற்போதைய சூழலை கருத்தில்கொண்டு தாம் பொலிஸ் பாதுகாப்பு கோரியுள்ளதாகவும், உரிய நடவடிக்கை முன்னெடுப்பார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
@ap
ஜூன் 18ம் திகதி மர்ம நபர்களால் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜர் போன்றே, குர்மீத் சிங் தூர் என்பவரும் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை பிளந்து காலிஸ்தான் என்ற சீக்கீய மாகாணம் அமைய வேண்டும் என போராடி வருபவர்.
காலிஸ்தான் மாகாணத்திற்காக போராடுபவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தியுள்ள இந்திய அரசாங்கத்தால் தான் தமது உயிருக்கும் அச்சுறுத்தல் என குர்மீத் சிங் தூர் நம்புகிறார்.
சர்ரே பகுதியில் வசிக்கும் மேலும் இரு சீக்கிய தலைவர்களுக்கும் பொலிஸ் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |