கனடாவில் பட்டப்பகலில் இந்திய வம்சாவளி தந்தை, 11 வயது மகன் சுட்டுக்கொலை!
கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தை, மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிர்ச்சி சம்பவம்
எட்மண்டன் நகரில் உள்ள எரிவாயு நிலையம் அருகே மர்ம நபர்கள் சிலர் நபர் ஒருவரையும், அவரது 11 வயது மகனையும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Kyaw Soe Oo/Reuters
இதனையடுத்து கொல்லப்பட்ட நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் உப்பல் (41) என்பது தெரிய வந்தது. பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் நண்பர் உடலில் காயங்கள் இன்றி உயிர் பிழைத்ததாக செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவுக்கு லட்சக்கணக்கில் வருவாயை உருவாக்கும் சர்வதேச மாணவர்கள்: உணவு தரமுடியாது என்று கூறியுள்ள உணவு வங்கி
சார்ஜெண்ட் கூற்று
எட்மன்டன் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் நிலையில், 'இந்த வன்முறை நிகழ்வின் விளைவாக இன்று ஒரு குழந்தை தனது உயிரை இழந்தது குறித்து நாங்கள் வருத்தமடைகிறோம்.
துப்பாக்கிச்சூட்டின் விளைவாக குழந்தைகளின் இழப்பு அல்லது காயம் அளவிட முடியாதது மற்றும் இந்த விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்ட எவரும் கூடிய விரைவில் முன்வருமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்' என EPS கொலைப் பிரிவின் பணியாளர் சார்ஜெண்ட் ராப் பிலாவே கூறியுள்ளார்.
Unsplash
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |