கனடாவில் சீக்கியர் மீது இனவெறுப்புத் தாக்குதல்
Toronto police are investigating a suspected hate motivated stabbing of a Sikh man: ரொரன்றோவில் சீக்கியர் ஒருவர் மீது இனவெறுப்புத் தாக்குதல் நடத்தப்பட்ட விடயம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
சனிக்கிழமையன்று கனடாவின் ரொரன்றோவில் நடந்து சென்றுகொண்டிருந்த சீக்கியர் ஒருவர் திடீரென தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இனவெறுப்புத் தாக்குதல்
நபர் ஒருவர் அந்த சீக்கியரை இன ரீதியில் விமர்சித்ததுடன், சீக்கியர்களுக்கு எதிராக மோசமான வார்த்தைகளாலும் விமர்சித்துள்ளார்.

அத்துடன், திடீரென அவர் அந்த சீக்கியரை கத்தியாலும் குத்தியுள்ளார். அவரது தொடையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளதாக ரொரன்றோ பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அந்த நபர் தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து செல்லும்போது யாரோ ஒருவர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அவரைத் தேடிவருகிறார்கள் பொலிசார்.
அத்துடன், அந்த நபரை பொதுமக்கள் யாராவது பார்த்திருந்தால் தங்களுக்கு தெரிவிக்குமாறும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |