உங்கள் நாட்டுக்கே ஓடிவிடு... வெளிநாட்டில் இந்திய வம்சாவளி நபருக்கு ஏற்பட்ட நெருக்கடி
அவுஸ்திரேலியாவில் சீக்கிய உணவக உரிமையாளர் ஒருவருக்கு கடந்த சில மாதங்களாக இன ரீதியான நெருக்கடி அளிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாய் கழிவுகளை வீசியதாக
குறித்த இந்திய வம்சாவளி நபரை, உங்கள் நாட்டுக்கே போய்விடு என மிரட்டிய நிலையில், அவரது வாகனத்தின் மீது நாய் கழிவுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் உணவம் ஒன்றை நடத்தி வருபவர் Jarnail Singh என்ற இந்தியர். கடந்த 2 அல்லது மூன்று மாதங்களாக, தொடர்ந்து இவர் இனரீதியான தாக்குதலை எதிர்கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது நாள் வரையில் இப்படியான நெருக்கடியை தாம் எதிர்கொண்டதில்லை என குறிப்பிட்டுள்ள ஜர்னைல் சிங், கடந்த மூன்று மாதங்களில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதுவும் உங்கள் குடியிருப்பை இலக்கு வைத்து தாக்கப்படும் போது உளவியல் ரீதியான அழுத்தம் உங்கள் தூக்கத்தை கெடுத்துவிடும் என்றார். முதலில், வாகனத்தின் கதவு கைப்பிடியில் நாய் கழிவுகளை வீசியிருந்தார்கள். இது 5 நாட்கள் வரையில் தொடர்ந்தது.
இந்தியாவுக்கு ஓடிவிடு என மிரட்டல்
அதன் பிறகு, உங்கள் நாட்டுக்கே திரும்பி போ என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது என ஜர்னைல் சிங் குறிப்பிட்டுள்ளார். பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டாலும், காணொளி ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு செல்லுபடியாகாது என்ற நிலை உருவானது என்றார்.
மேலும் தமது குடியிருப்பின் அருகே இந்தியாவுக்கு போ என்ற வாசகம் எழுதியவர் கண்டிப்பாக இளைஞராக இருக்கவே வாய்ப்பு என்றும் ஜர்னைல் சிங் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர், இந்தியாவுக்கு ஓடிவிடு என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தை நொறுக்கி விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
ஜர்னைல் சிங் கடந்த 15 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இதில் 10 ஆண்டுகள் ஹோபார்ட் நகரில் வசித்து வருகிறார். பொலிசார் தெரிவிக்கையில், ஜர்னைல் சிங் புகாரை பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இனவாத தாக்குதலுக்கு தண்டனை உறுதி எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் ஜர்னைல் சிங் மீதான தாக்குதலை யார் முன்னெடுத்தார்கள் என்பது குறித்து இதுவரை தகவல் ஏதுமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |