லண்டனில் சீக்கிய சிறுவன் 15 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை: தண்டனை போதாது என தாய் குமுறல்!
பிரித்தானியாவில் 16 வயது சீக்கிய சிறுவன் 15 முறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
லண்டனில் சீக்கிய சிறுவனுக்கு கத்திக்குத்து
மேற்கு லண்டனில் எதிரி கும்பலைச் சேர்ந்தவர் என கருத்தி, 16 வயது சீக்கிய சிறுவனை இரண்டு வாலிபர்கள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து 2019ம் ஆண்டு புகலிடம் கோரி தாய் மற்றும் பாட்டியுடன் பிரித்தானியா வந்த சீக்கிய சிறுவன் ரிஷ்மீத் (Rishmeet Singh), கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 24ம் திகதி இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருக்கும் போது, இரண்டு இளைஞர்கள் தான் துரத்தப்பட்டு வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
Rishmeet Singh(Sky News)
அந்த இளைஞர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சவுத்தாலில் உள்ள ராலே சாலையில் (Raleigh Road Southall) ஓடிய ரிஷிமீத், தடுமாறி விழுந்துள்ளார்.
அப்போது பின்தொடர்ந்தவர்களில் ஒருவர் ரிஷிமீத்-தை முதுகில் குறைந்தது ஐந்து முறை குத்தியுள்ளார், இரண்டாவது நபர் அவரை குறைந்தது 10 முறை குத்தியுள்ளார்.
படுகாயங்களுடன் சாலையில் கிடந்த ரிஷிமீத்-திற்கு அவசர முதலுதவி சிகிச்சைகள் அளித்தும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மெட் பொலிஸார் நீதிமன்ற விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Vanushan Balakrishnan-Ilyas Suleiman(Sky News)
குற்றவாளிகள் கைது
ரிஷிமீத் மீது தவறுதலாக தாக்குதல் நடத்தி விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய 18 வயது இளைஞர்களான வனுஷன் பாலகிருஷ்ணன் மற்றும் இலியாஸ் சுலைமான் ஆகியோர் 2021 டிசம்பர் மாதம் மெட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் திங்களன்று ஓல்ட் பெய்லியில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, ஹிலிங்டனைச் சேர்ந்த வனுஷன் பாலகிருஷ்ணன் மற்றும் இலியாஸ் சுலைமான் ஆகிய இருவரும் ரிஷ்மீத் சிங்கைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
PTI
இந்த ஜோடிக்கு ஏப்ரல் 28, 2023 அன்று ஓல்ட் பெய்லியில் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இறுதியாக ரிஷ்மீத்துக்கு நீதி கிடைத்தது ஆனால் அவர்களின் தண்டனை எனக்கு ஒருபோதும் போதுமானதாக இருக்காது என பாதிக்கப்பட்டவரின் தாய் குலிந்தர் தெரிவித்துள்ளார்.