பிரித்தானியாவில் இந்திய பெண்ணுக்கு எதிராக இனவெறி தாக்குதல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம்
பிரித்தானியாவில் இந்திய பெண் ஒருவருக்கு எதிராக இனவெறி தாக்குதல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீக்கிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பிரித்தானியாவின் ஓல்ட்பரி நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண் ஒருவர் இனவெறி மற்றும் பாலியல் துஷ்பிரயோக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் டேம் சாலைக்கு அருகே கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் அரங்கேறியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இரண்டு நபர்கள் “உன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்” என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் இந்த வன்முறை சம்பவத்தை இனவெறி தாக்குதலுக்கு கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெளியான தகவல் படி, தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு ஆண்களும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு தடயவியல் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த தாக்குதல் சம்பவம் உள்ளூர் சிக்கிய சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |