சீக்கிய கனேடிய பெண்ணிற்கு பலமுறை கத்திக்குத்து: சமூக வன்முறையா? என பொலிஸார் தீவிர விசாரணை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வசித்து வந்த 40 வயதுடைய சீக்கிய பெண்மணி கத்தியால் பல முறை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீக்கிய பெண் படுகொலை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய சீக்கிய பெண்மணி ஹர்பிரீத் கவுர் அவரது வீட்டில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த பொலிஸார் புதன்கிழமை இரவு 9:30 மணிக்கு 66 அவென்யூவில் 12700-பிளாக்கில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு செய்ததில், ஹர்பிரீத் கவுர்(40) கத்தியால் பல முறை குத்தப்பட்டு பரிதாபமான முறையில் விழுந்து கிடந்துள்ளார்.
RCMP have identified the victim of a fatal stabbing in Surrey this week as 40-year-old Harpreet Kaur.
— Kamil Karamali (@KamilKaramali) December 10, 2022

Her husband was arrested on scene but has now been released, but say there was “alleged domestic violence.”
More here: https://t.co/p9IjezJaDy #surreybc pic.twitter.com/ofmG05OMmN
பலத்த கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட ஹர்பிரீத் கவுர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், இருப்பினும் ஹர்பிரீத் கவுர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
ஹர்பிரீத் கவுர் கொலை செய்யப்பட்ட வழக்கை தீர்ப்பதற்கு புலனாய்வாளர்கள் 24 மணிநேரமும் உழைத்து வருவதாகக் ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழுவின் சார்ஜென்ட் திமோதி பைரோட்டி ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட கணவர்
ஹர்பிரீத் கவுர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கணவர் பின் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டார்.
இது சமூக வன்முறையாக இருக்கலாம் என தெரிவித்த சார்ஜென்ட் திமோதி பைரோட்டி , அவ்வாறு இந்த வழக்கு சமூக வன்முறையாக இருந்தால் இதனை காவல்துறை தீவிரமாக எடுத்து கொல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் கடந்த டிசம்பர் 3ம் திகதி 21 வயதுடைய பவன்ப்ரீத் கவுர் என்ற கனேடிய சீக்கிய பெண், மிசிசாகா எரிவாயு நிலையத்தின் வாசலில் சுட்டு கொல்லப்பட்டார்.
மேலும் அதற்கு முந்தைய மாதம் 18 வயதுடைய இளம் பெண் மெஹக்ப்ரீத் சேத்தி, சர்ரே பகுதியில் உள்ள பள்ளி பார்க்கிங் வளாகத்தில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.