கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையை தரதரவென இழுத்துச் சென்ற கணவர்! அதிர்ச்சியளித்த காட்சி
பிரபல நடிகை சனா கான் கர்ப்பமாக உள்ள நிலையில், அவரது கணவர் அவரை தரதரவென இழுத்துச் சென்ற காட்சி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகை சனா கான்
ஜீவா நடிப்பில் வெளியான ஈ படத்தில் கவர்ச்சி நடனம் ஒன்றில் நடனமாடி திரையுலகிற்கு அறிமுகமானாவர் தான் சனா கான். பின்பு சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அடுத்தடுத்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைத்த நிலையில், இந்தி தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்து வந்தார்.
பின்பு கடந்த 2020ம் ஆண்டு முஃப்தி அனஸ் சையத் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து நடிப்பிலிருந்து ஒதுங்கினார். தற்போது தனது கணவருடன் வசித்து வரும் இவர் இஃப்தார் விருந்து ஒன்றில் கலந்து கொண்டார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் சனா கானை அவரது கணவர் தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி வைரலானது. கர்ப்பமாக இருக்கும் பெண்ணிடம் இப்படியா நடந்துகொள்வது என சனா கானின் கணவரை இணையவாசிகள் வறுத்தெடுத்தனர்.
ஆனால் இதற்கு சனா கான் அளித்த பதில் என்னவெனில், தனக்காக அக்கறை கொண்டதற்கு நன்றி... தங்களது கார் டிரைவருக்கு போன் போகாமல் இருந்ததால் நீண்ட நேரம் நின்றேன். அதிகமாக வேர்த்து கொட்டி அசௌகரியமாக இருந்ததால் தான் தன்னை தனது கணவர் அங்கிருந்து வேகமாக அழைத்துச் சென்றார் என்று கூறியுள்ளார்.