ஷேன் வார்னே மறைவுக்கு அஞ்சலி செலுத்திய இலங்கை - இந்திய வீரர்கள்! கருப்புப் பட்டை அணிந்து போட்டியில் பங்கேற்பு
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மறைவுக்கு இந்தியா - இலங்கை வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இலங்கை - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
போட்டி தொடங்கும் முன்னர் ஷேன் வார்னே மறைவுக்கு இந்திய, இலங்கை வீரர்கள் மெளன அஞ்சலி செலுத்தினார்கள். இரு அணி வீரர்களும் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் அனைத்து வீரர்களும் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகிறார்கள்.
அவுஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்டுகளில் விளையாடிய 708 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்கியவர் ஷேன் வார்னே. இந்நிலையில் நண்பர்களுடன் தாய்லாந்து சென்ற வார்னே, எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.