ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா? வெளியான தகவல்
தனிப்பயன் சிலிக்கானை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் மெட்டாவர்ஸ் சார்ந்த Reality Labs பிரிவின் யூனிட்டில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெட்டாவின் திட்டம்
மெட்டாவின் The Fast Unit 600 பணியாளர்களை கொண்டுள்ளது. ஆனால், Reality Lab பிரிவின் unitயில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது.
ராய்ட்டர்ஸிடம் இந்த தகவலை விடயம் அறிந்த ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக மெட்டாவின் உள் விவாத மன்றம் பணியிடத்தில் ஒரு இடுகையில் பணிநீக்கங்கள் குறித்து ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து கருத்து தெரிவிக்க மெட்டா செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஜுக்கர்பெர்க்
இதற்கிடையில், மெட்டா ஒரு புதிய நிர்வாகி யூனிட்டை வழிநடத்த நியமித்த வசந்த காலத்தில் இருந்து FASTயின் மறுசீரமைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 'இந்த ஆண்டு பணி நீக்கங்களின் பெரும்பகுதி வசந்த காலத்தில் நடக்கும். ஆனால், சிறிய எண்ணிக்கையில் இந்த மாற்றங்களை முடிக்க ஆண்டின் இறுதி ஆகலாம்' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |