வெள்ளியில் மின்னும் கிண்ணங்கள்! மாப்பிள்ளைக்கு சீர் செய்து அசத்திய மாமனார்.. வைரல் வீடியோ
இந்தியாவில் மகளின் திருமணத்தில் பெற்றோர்கள் அடுக்கி வைத்திருந்த சீர் வரிசை வீடியோ ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.
செட்டிநாடு என்றாலே அரண்மனை போன்ற வீடுகள், சாப்பாடு போன்றவை தான் நினைவுக்கு வரும். அந்த வரிசையில் திருமணத்திற்கு சீர்வரிசை வைப்பதிலும் புகழ் பெற்ற ஊராக செட்டிநாடு விளங்கி வருகின்றது.
இந்நிலையில் காரைக்குடி திருமணம் ஒன்றில் மகளின் திருமணத்திற்கு வைக்கப்பட்ட சீர்வரிசை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் வெள்ளி அம்மிக்கல், ஆட்டுக்கல், நெல் குத்துக்கல், இட்லி சட்டி, குடங்கள், சங்கு, தாம்பூலம், பல்லாங்குழி, பாத்திரங்கள், குத்துவிளக்கு போன்ற எல்லா பொருட்களும் வெள்ளியில் செய்யப்பட்டுள்ளது.
பல லட்சம் மதிப்பில் வெள்ளி பொருட்களான சீர்வரிசை செய்து தங்களது மகளை திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளையை அசத்தியுள்ளனர். திருமணம் நடைபெறும் மண்டபத்தில் அடுக்கி வைத்திருந்த வெள்ளி பாத்திரங்கள், வெள்ளி சாமான்களை பார்க்கவே ரம்யமாக இருக்கிறது.
காரைக்குடி செட்டிநாடு திருமணத்தில் அடுக்கப்பட்ட வெள்ளி சீர்வரிசைகள்! pic.twitter.com/15R4YwzyBb
— Stalin Navaneethakrishnan (@stalinABPtamil) February 9, 2022