புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை: ஒரே நாளில் 5% அதிகரித்த மதிப்பு
விலைமதிப்பற்ற உலோகமான வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
வெள்ளி விலை உயர்வு
திங்கட்கிழமை அமெரிக்காவின் விலைமதிப்பற்ற உலோகங்களின் சந்தை வர்த்தகம் ஏற்றம் கண்டதை அடுத்து வெள்ளியின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு அவுன்ஸ் 84.62 டொலர்கள் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இதன் மூலம் வெள்ளியின் விலை ஒரே நாளில் 5% உயர்ந்துள்ளது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்காவின் நீதித்துறை இடையே வெடித்துள்ள கருத்து வேறுபாட்டை தொடர்ந்தே இந்த விலைமதிப்பற்ற உலோகங்களின் விலை கிடுகிடிவென உயர்ந்து இருப்பதாக பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலை சுமார் 4,600 டொலர்கள் என்ற மதிப்பை நெருங்கி வரும் நிலையில், அதற்கு அடுத்தப்படியான வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தங்கத்தின் விலை 1.78% உயர்ந்து சுமார் $4,585.40 டொலராக நிர்ணயம் செய்யபட்டுள்ளது.
அதைப்போல பிளாட்டினம் 3.34% உயர்ந்து $2,365.87 ஆகவும், பல்லேடியம் 1.95% உயர்ந்து $1860 டொலராகவும் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.
இந்தியாவில் இன்றைய நிலவரப்படி வெள்ளி விலை 1 கிலோ ரூ.12,000 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |