Silver ETF... நடப்பாண்டில் 100% லாபம்: முதலீடு செய்வது எப்படி?
எப்போதுமில்லாமல், 2025ல் மட்டும் வெள்ளி விலை பெரும் உச்சத்தைத் தொட்டுள்ளது. சில்லறை வர்த்தகத்திலேயே ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 226 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தில் இருக்கிறது.
பெரும் லாபம்
வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனை சரியாக கனித்து இந்த ஆண்டில் Silver ETFகளில் முதலீடு செய்தவர்கள் அனைவருமே 100 சதவீதம் லாபம் பார்த்திருக்கிறார்கள்.

வெள்ளியில் முதலீடு என்றால் வெள்ளி பொருட்களாகவோ, நகைகளாகவோ, நாணயங்களாகவோ அல்லது வெள்ளி கட்டிகளாகவும் வாங்கி வைப்பது அல்ல.
Silver ETF திட்டங்களில் செய்த முதலீடு மட்டுமே பலருக்கும் பெரிய லாபத்தை தந்திருக்கிறது. டிமேட் கணக்கில் Silver ETF திட்டத்தை தெரிவு செய்து அதில் பணத்தை முதலீடு செய்தவர்கள் பெரும் லாபம் ஈட்டியுள்ளனர். அதாவது ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது இரண்டு லட்சம் ரூபாய் என லாபம் தந்துள்ளது.
தங்கத்தில் எப்படி ETF திட்டங்கள் செயல்படுகிறதோ அதுபோலவே, தற்போது இந்தியாவில் Silver ETF திட்டங்களும் செயல்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையை கண்காணித்து பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்படக்கூடிய ஒரு பரஸ்பர நிதி என இந்த ETF திட்டங்களை வைத்துக் கொள்ளலாம்.
இதனால், நாம் நாணயங்களாகவோ, கட்டிகளாகவோ வாங்காமல் யூனிட்டுகளாக வாங்குவோம். Silver ETF திட்டங்களில் ஒவ்வொரு யூனிட்டும் வெள்ளிக்கு நிகரான மதிப்பை குறிக்கிறது.

இதனால் சந்தையில் வெள்ளி விலை உயர உயர, முதலீட்டாளர்களுக்கு லாபத்தை தரும். இது செபியால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு முதலீட்டு திட்டம் என்பதால், Silver ETF திட்டங்களிலும் நாம் அச்சமின்றி முதலீடு செய்யலாம்.
முதலீடு
ஒரு டீமேட் கணக்கு இருந்தாலே எளிதாக பங்குச்சந்தை நடைபெறும் நேரங்களில் Silver ETFல் பணத்தை முதலீடு செய்யலாம், லாபம் என்றால் விற்பனை செய்து உடனடியாக பணமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் 100 ரூபாய் மதிப்புள்ள 100 யூனிட்களை 10000 ரூபாய் செலுத்தி Silver ETFல் வாங்கி இருந்தால் அதன் தற்போதைய மதிப்பு 20000 ரூபாய்.

வெள்ளியை பொருட்களாகவோ அல்லது நாணயங்களாக வாங்கும் போது அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ETFல் 99 சதவீத பணம் உங்களுக்கான முதலீடாகவே இருக்கும்.
இந்தியாவில் Nippon India Silver ETF, ICICI Prudential Silver ETF, Aditya Birla Sun Life Silver ETF, HDFC Silver ETF, Kotak Silver ETF ஆகியவை மிகப்பிரபலமான திட்டங்களாக உள்ளன.
ஆனால், எந்த முதலீடும் சொந்தமாக முன்னெடுக்கும் ஆய்வுக்கு பின்னரே, செயல்படுத்த வேண்டும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |