உச்சம் தொடும் வெள்ளி விலை! வாங்கி குவிக்கும் முதலீட்டாளர்கள்: பொருளாதார கவலையின் விளைவுகள்
உலக அளவில் அதிகரிக்கும் நிலையற்ற பொருளாதார தன்மை காரணமாக விலைமதிப்பற்ற உலோகங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றனர்.
உச்சம் தொடும் வெள்ளி விலை
உலக அளவிலான நிலையற்ற பொருளாதார தன்மை காரணமாக புதன்கிழமை விலைமதிப்பற்ற உலோகங்களின் விலை உயர்ந்துள்ளன.
இதில் குறிப்பாக வெள்ளி மிக அதிகமான விலை உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிழக்கு நேரப்படி காலை 10.17 மணியளவில் வெள்ளியின் விலை மதிப்பு 4.13% அதிகரித்துள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை $53.34 ஆக வர்த்தம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளியை தொடர்ந்து தங்கம் 1.65% உயர்ந்து, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,198.08 ஆக வர்த்தம் செய்யப்பட்டுள்ளது.
பிளாட்டினம் 1.74% உயர்ந்து, ஒரு அவுன்ஸ் பிளாட்டினத்தின் விலை $1,624.99 ஆக வர்த்தம் செய்யப்பட்டுள்ளது.
பல்லேடியம் 0.97% உயர்ந்து ஒரு அவுன்ஸ் பல்லேடியமின் விலை $1,455.45 ஆக வர்த்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக, நிலையற்ற பொருளாதார தன்மைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துக்களுக்கு நகர்வதற்கான தேவையை தூண்டியுள்ளது என்பதை காட்டுகிறது.
பணவீக்க தொடர்பான அச்சம்
அதிகரித்து வரும் பொருளாதார பலவீனங்கள் காரணமாக பிரித்தானியாவில் 3வது காலாண்டில் வேலையின்மை விகிதம் 5% ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் அக்டோபர் 25ம் திகதியுடன் நிறைவடைந்த நான்கு வார காலத்தில், ஒவ்வொரு வாரத்திற்கும் சுமார் 11,250 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் நிதிக் கொள்கை குழு உறுப்பினர் மேகன் கிரீன், நீண்ட பணவீக்கம் தொடர் எச்சரிக்கையை தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |