கூடிய விரைவில் ரூ.1 லட்சத்தை எட்டும் வெள்ளி விலை - நிபுணர்கள் கூறுவது என்ன?
சர்வதேச சந்தையை பொறுத்தளவில் தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணத்தில் தான் உண்டு. அதாவது ஜந்தாண்டு தங்கத்தின் விலை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
அதையடுத்து தற்போது வெள்ளி விலையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளி விலை 35 சதவீதம் அதிகரித்து உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளி விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை அன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.94,000 என்ற உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் வெள்ளி விலை ரூ.1 லட்சத்தை ஏற்கனவே தாண்டியுள்ளது.
அதிகரித்து செல்லும் வெள்ளி விலை
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை, சீனாவின் பணக்கொள்கை, தொழிற்துறை தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை மேலும் அதிகரித்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலை உயர்ந்து செல்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அமெரிக்க வட்டி குறைப்பு. அமெரிக்காவின் பண வீக்கம் குறைந்தால் அந்நாட்டின் வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பை தொடரும்.
இதனார் வெள்ளி மீது மேற்கொள்ளப்படும் முதலீடு அதிகரித்து செல்லும், எனவே விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கொரோன காலக்கட்டத்தில் பொருளாதார ரீதியில் சரிவைக் கண்ட சீனா, தற்போது வெள்ளியில் தனது முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. அதாவது சோலார் பேனல் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. எனவே தொழிற்துறை தேவை அதிகரிக்கப்படும்.
மேலும் தற்போது பண்டிகைகளும் திருமணங்களும் அதிகமாக நடைபெற்று வரும் காலம் என்பதால், மக்கள் பரிசு பொருட்களுக்காக வெள்ளியை வாங்குவார்கள். இதனால் வெள்ளி விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் மின் சாதனங்கள், பேட்டரி போன்றவற்றில் வெள்ளி பயன்படுத்தபடுவதால் விலை உயரலாம்.
வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.95,000 தாண்டும்போது, விலை அதிகரித்து குறுகிய காலத்திற்குள் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.10 லட்சம் வரை விலை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |