டெண்டுல்கர் மகன் அர்ஜுனுக்கு பதிலாக புதிய வீரரை சேர்த்த மும்பை அணி! என்ன காரணம்?
மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு பதிலாக புதிய வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், அர்ஜுன் டெண்டுல்கர் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக சிமர்ஜீத் சிங் அணயில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2021 ஐபிஎல் சீசனின் எஞ்சியிருக்கும் போட்டிகளுக்காக காயமடைந்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு மாற்றாக சிமர்ஜீத் சிங்கை மும்பை இந்தியன்ஸ் சேர்த்துள்ளது.
வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் சிமர்ஜீத் சிங், ஐபிஎல் வழிகாட்டுதலின்படி கட்டாய தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் அணியுடன் பயிற்சியைத் தொடங்கியுள்ளார் என மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது.
? Squad Update ?
— Mumbai Indians (@mipaltan) September 29, 2021
Right-arm medium pacer Simarjeet Singh will be replacing Arjun Tendulkar for the remainder of #IPL2021
? Read all the details ?#OneFamily #MumbaiIndians https://t.co/AcfBJsYf2w
இதன் காரணமாக அர்ஜுன் டெண்டுல்கர் தனது அறிமுக ஐபிஎல் போட்டியில் விளையாட அடுத்த ஐபிஎல் சீசன் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனை, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த வீரர்களின் ஏலத்தில் அவரின் அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.