மீண்டும் காதல் வலையில் சிக்கிய நடிகர் சிம்பு! விரைவில் திருமணமா? உற்சாகத்தில் ரசிகர்கள்
நடிகர் சிம்பு மற்றும் ஈஸ்வரன் படத்தில் கதாநாயகியாக நடித்த நிதி அகர்வாலும் காதலித்து செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு தற்போது பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாகவே சிம்புவிற்கு தமிழ் சினிமா துறையில் பல பிரச்சனைகள் இருந்து வருகின்றது.
இந்நிலையில் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் விதமாக சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது சிம்புவும் நடிகை நிதி அகர்வாலும் காதலித்து வருவதாக கூறப்படுகின்றது.
திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில் தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நிதி அகர்வால். இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த கே.எல்.ராகுலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்தார்.
ஆனால் திடீரென இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில், சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த போது நிதி அகர்வாலுக்கு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிம்பு வீட்டிலேயே தங்கும் அளவிற்கு நெருக்கமாகிவிட்டதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே சிம்பு பல காதலில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் இந்த புதிய காதல் எத்தனை நாட்கள் நீடிக்கும்? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதே வேளையில் சிம்புவின் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.