புற்றுநோயுடன் போராடும் குழந்தைகளுக்காக சிம்பு செய்த ஒரு காரியம்! நெகிழவைக்கும் வீடியோ காட்சி
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்ட நடிகர் சிம்புவின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் திகதி 'ரோஸ் டே' எனப்படும் 'உலக ரோஜா தினம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருப்பதற்காக இந்த உலக ரோஜா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் சென்னையில் நடந்த 'ரோஸ் டே' நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு கலந்து கொண்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் உலக ரோஜா தினம் கடைப்பிடிக்கபட்டது.
சென்னையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் "லிட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார்" பாட்டுக்கு நடனமாடிய நடிகர் சிம்பு! #str @SilambarasanTR_ @hariharannaidu pic.twitter.com/iEXMNDBCZi
— meenakshisundaram (@meenakshinews) September 22, 2021
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுவரும் குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு உற்சாகம் அளித்தார்.
குழந்தைகள் மத்தியில் மேடையில் பேசிய சிம்பு நீங்கள் அனைவருமே எங்களுக்கு இன்ஸ்பிரேஷன், நீங்கள் தான் உண்மையில் லிட்டில் சூப்பர் ஸ்டார், எல்லோரும் பாசிடிவிட்டி ஆக இருங்கள் அதுவே உங்களை குணப்படுத்தும் என்று குழந்தைகளுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக பேசினார்.
இதோடு குழந்தைகளோடு நடனமாடி அவர்களுக்கு பரிசுகளை அளித்தார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.