விராட் கோலியுடனான சந்திப்பில் நடந்தது இதுதான் - மனம் திறந்த சிம்பு
மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஆகியோர் நடிப்பில் உருவான தக் லைப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.
இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிலம்பரசன், விராட் கோலியுடனான சந்திப்பு குறித்து பேசியுள்ளார்.
சிம்பு கோலி சந்திப்பு
அதில் பேசிய அவர், விராட்கோலி தான் அடுத்த சச்சின் என நான் முன்பே கணித்தேன். ஆனால், அவர் 2 வருடங்கள்தான் தாக்குப்பிடிப்பார் என்று பலரும் சொன்னார்கள்.
ஆனால் இப்போது அவர் அந்த உயரத்தை அடைந்து விட்டார். ஒரு முறை விராட் கோலியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நானாகவே அவரிடம் சென்று கை கொடுத்தேன்.
நீங்கள் யார் என கேட்டார். நான் நடிகர் சிம்பு என கூறினேன். சாரி நீங்கள் யார் என தெரியாது என கூறி சென்று விட்டார். ஒரு நாள் உங்களுக்கு தெரிய வரும் என நினைத்துக் கொண்டேன்.
சமீபத்தில், 'நீ சிங்கம் தான்' பாடல் பிடிக்கும் என அவர் சொல்லியிருக்கிறார். அதுவே வெற்றிதான்.
இப்பவும் அவருக்கு என்னை தெரியுமா? என்று எனக்கு தெரியாது. அவர் சொன்னது அந்தப் பாட்டைத் தான்" எனக் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |