மூலநோயால் அவஸ்தைப்படுறீங்களா? இதனை குணப்படுத்த இதோ 10 எளிய வீட்டு வைத்தியங்கள்!
constipation
home remedies
piles
By Kishanthini
பொதுவாக மூல நோய் என்பது ஆசன வாயில் உள்ள நரம்பு பகுதிகள் வீக்கம் அடைவதால் இந்த மூல நோய் வருகிறது.
கோடை காலத்தில் இந்த பைல்ஸ் நோயால் பல பேர் சிரமப்படுவார்கள்.
பைல்ஸ் நோயினை ஆரம்ப காலத்திலே பார்த்து சரி செய்துவிட்டால் பிரச்சனை எதுவும் ஏற்படாது
இதனை போக்க ஒரு சில இயற்கை மருத்துவங்கள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- முள்ளங்கி ஜூஸ் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிப்பது பைல்ஸ் பிரச்சனைக்கு ஒரு பொதுவான தீர்வு ஆகும். தொடக்கத்தில் 1/4 டம்ளர் என தொடங்கி, படிப்படியாக அதை அரை டம்ளர் ஒரு டம்ளர், என கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்கவும்.
- மூன்று அல்லது நான்கு உலர்ந்த அத்திப் பழங்களை முதல் நாள் இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அத்திப்பழம் ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை என சாப்பிடுங்கள்.
- மாதுளம்பழத்தின் தோலை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை வெதுவெதுப்பாகவோ அல்லது குளிர வைத்தோ, ஒரு நாளைக்கு இரண்டு முறை வடிகட்டி குடிக்கவும்.
- பைல்ஸ் பிரச்சனையால் ஏற்படும் வலியைக் குறைக்க, கல் உப்பு, இஞ்சி மற்றும் மிளகுத்தூள் சேர்க்கப்பட்ட மோர் குடிக்கவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.
- உலர்ந்த மாம்பழக் கொட்டைகளைப் பொடி செய்து கொள்ளுங்கள். இரண்டு டீஸ்பூன் இந்த பொடியுடன் சிறிது தேன் கலந்து தினமும் இருவேளை சாப்பிடவும்.
- ஒரு டீஸ்பூன் இஞ்சி, எலுமிச்சை சாறு, புதினா இலைகள் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை சாப்பிடுங்கள்.
- சிறிய துண்டு பாகற்காயை நன்கு அரைத்து'அதன் சாறினை எடுத்துக் கொள்ளவும். இதை சிறிது மோருடன் கலந்து தினமும் காலையில் குடிக்க வேண்டும்.
- மஞ்சள், கிருமி நாசினிகள் மற்றும் குணப்படுத்தும் பல பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, மஞ்சள் கிழங்கை அரைத்து ஒரு டீஸ்பூன் சாப்பிடுங்கள்.
- ஒரு கைப்பிடியளவு எள் எடுத்து, அதை 500 மில்லி தண்ணீரில், மூன்றில் ஒரு பங்காகக் குறையும் வரை கொதிக்க வைக்கவும். இதை பேஸ்ட் செய்து ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிட வேண்டும்.
- சீரகத்தை அரைத்துப் பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு முறை என குடிக்கவும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US