Simple Energy மின்சார ஸ்கூட்டர்கள் இப்போது Amazon, Flipkart-ல் கிடைக்கும்
Simple Energy மின்சார ஸ்கூட்டர்கள் Amazon மற்றும் Flipkart ஆகிய ஓன்லைன் தளங்களில் கிடைக்கவுள்ளன.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட Simple Energy நிறுவனம், தனது Simple One Gen 1.5 மற்றும் Simple OneS மின்சார ஸ்கூட்டர்களை நேரடியாக Amazon India மற்றும் Flipkart தளங்களில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை அறிவித்துள்ளது.
இது, இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களை ஓன்லைனில் வாங்கும் புதிய பரிமாணமாகும்.
இதன்மூலம், Tier 2 மற்றும் Tier 3 நகரங்களில் ஷோரூம்கள் இல்லாத இடங்களிலும் வாடிக்கையாளர்களை எளிதில் அடைய உதவும்.
“இந்த பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வழியாக எளிமையான அனுபவத்தை வழங்குவதே நோக்கம்” என Simple Energy நிறுவனர் சுஹாஸ் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Amazon Great Indian Festival-ல் HDFC மற்றும் ICICI வங்கிக் கார்டுகளுக்கு ரூ.14,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Flipkart Big Bang Diwali Sale-ல் ரூ.7,500 வரை தள்ளுபடி மற்றும் 12 மாத interest-free EMI வசதியும் உள்ளது.
Simple One Gen 1.5 மாடல் ரூ.1.72 லட்சம் விலையில், 248 கிமீ வரை பயணிக்கும் திறன், 30 லிட்டர் சேமிப்பு, regenerative braking, OTA updates போன்ற வசதிகளுடன் வருகிறது.
Simple OneS மாடல் ரூ.1.55 லட்சம் விலையில், 181 கிமீ மைலேஜ், 7-இன்ச் டச் ஸ்கிரீன், 5G eSIM, Bluetooth வசதிகளுடன் வருகிறது. இரண்டும் 39 நிமிடங்களில் 80 சதவீதம் வரை வேகமாக சார்ஜ் செய்யக்கூடியவை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Simple Energy electric scooter online, Simple One Gen 1.5 Amazon Flipkart, Buy EV scooter online India 2025, Simple OneS Flipkart sale, Electric scooter festive offers 2025, Simple Energy Amazon partnership, EV scooter doorstep delivery India, Best electric scooters India 2025