10 வகை நோய்களுக்கு எளிய நாட்டு மருத்துவ குறிப்புகள்! இதோ உங்களுக்காக
தேங்காய் எண்ணையில் சிறிதளவு கற்பூரம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அவை ஆறியதும் நெஞ்சில் தடவ நெஞ்சி சளி குணமாகும்.
10 துளசி இலை, சிறுதுண்டு சுக்கு மற்றும் 2 லவங்கம் ஆகியவற்றை நன்கு அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி குணமாகும்.
சுக்கு, வெள்ளை மிளகு மற்றும் திப்பிலி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட தொடர் விக்கல் குணமாகும்.
சட்டியில் படிகாரத்தை போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்து தினமும் மூன்று வேலை சாப்பிட வாய் நாற்றம் குணமாகும்.
கரும்பு சக்கையை எரித்து சாம்பல் எடுத்து அதை வெண்ணையில் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு பிரட்சனைகள் குணமாகும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பில்லை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி குடிக்க செரிமானம் நன்கு அடையும்.
மஞ்சளை அனலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். பின்பு அந்த சாம்பலை தேனில் கலந்து சாப்பிட குடல் புண் குணமாகும்.
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.
செம்பருத்தி இலையை காய வைத்து பொடி செய்து தினமும் சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.