உங்களுக்கு ஜலதோஷமா? இதனை குணமாக்கும் இதோ சில எளிய வீட்டு வைத்தியங்கள்
Home remedies
Cold Fever
By Kishanthini
குளிர்காலம் வந்துவிட்டாலே ஜலதோஷம் நம்மை வாட்டி எடுக்கும்.
சளி, காய்ச்சல், இருமல் என மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக நீங்களே உங்களது வீட்டில் உள்ள சமையலறை பொருட்கள் மற்றும் இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாமே..
தற்போது ஜலதோஷத்தை போக்கு ஒரு சில வீட்டு வைத்தியங்களை இங்கே பார்ப்போம்.
- பூண்டு பல்லை பாலுடன் வேக வைத்து அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சளை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பாலை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வரும் போது பிடித்திருந்த சளித்தொல்லை விட்டு விலகும்.
- வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்களை கொண்டு சுவையான சாலட் செய்து சாப்பிடலாம். இவை ஜலதோசத்தை எளிதில் குணப்படுத்துகிறது.
- தயிர் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் ஜலதோஷத்தின் அறிகுறிகளைக் குறைக்கும். மேலும் தயிரை அறைவெப்பநிலையில் வைத்திருப்பதோடு உறைய வைத்த உடனே சாப்பிட வேண்டும். அதேசமயம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது.
- பச்சை இலை காய்கறிகள் ஜலதோஷம் போன்ற உடலின் பாதிப்புகளுக்கு சரியான தீர்வளிக்கிறது. இதனை சாலட், ஜூஸ்.சூப் என பல வகைகளில் நமக்கேற்றவாறு எடுத்து கொள்ளலாம்
- சால்மன் மீனில் புரோட்டீன்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்களுடன், இரும்புச்சத்து, கால்சியம், செலினியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை அதிகம் உள்ளது. இவை சளி மற்றும் இருமலைச் சமாளிக்க உதவும்
- ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவி அதனை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். ஜலதோஷத்தால் பாதிக்கப்படும் போது ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளை இஞ்சி குறைக்க உதவும்.
- பொதுவாக ஜலதோஷம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது உடலுக்கு அதிகப்படியான கலோரிகள் தேவைப்படும். அந்த சமயத்தில் நட்ஸ் போன்ற கொட்டை உணவுகளை பயன்படுத்தலாம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US