முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட எளிமையாக உயிரை மாய்த்துக்கொள்ளும் இயந்திரம்: பொலிசார் அதிரடி

Switzerland
By Balamanuvelan Sep 25, 2024 08:23 AM GMT
Report

எளிமையாக, தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் என சமீபத்தில் சர்ச்சையை உருவாக்கிய இயந்திரம் ஒன்று சுவிட்சர்லாந்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதன்முறையாக அந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்ட நிலையில், அது தொடர்பாக சுவிஸ் பொலிசார் பலரை கைது செய்துள்ளார்கள்.

முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட எளிமையாக உயிரை மாய்த்துக்கொள்ளும் இயந்திரம்: பொலிசார் அதிரடி | Simple Machine Used For The First Time To Death

எளிமையாக உயிரை மாய்த்துக்கொள்ளும் இயந்திரம்

The Last Resort என்னும் நிறுவனம், நீண்ட கால மற்றும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோர், தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

அதற்கு சார்க்கோ (Sarco) என பெயரிடப்பட்டுள்ளது.

முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட எளிமையாக உயிரை மாய்த்துக்கொள்ளும் இயந்திரம்: பொலிசார் அதிரடி | Simple Machine Used For The First Time To Death

இந்நிலையில், திங்கட்கிழமையன்று, Schaffhausen மாகாணத்தில், 64 வயது அமெரிக்கப் பெண்ணொருவர் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

அவர் பயங்கரமான நோயெதிர்ப்புக் குறைபாடு ஒன்றால் அவதியுற்று வந்த நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளார்.

பொலிசார் அதிரடி  

ஆனால், அந்த இயந்திரத்தை உருவாக்கிய நிறுவனத்தின் துணை தலைவரான Florian Willet என்பவரையும், அவருடன் பலரையும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

அவர்களில், நெதர்லாந்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரும், சுவிஸ் நாட்டவர்கள் இருவரும் அடக்கம்.

முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட எளிமையாக உயிரை மாய்த்துக்கொள்ளும் இயந்திரம்: பொலிசார் அதிரடி | Simple Machine Used For The First Time To Death

அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பில் சுவிட்சர்லாந்தில் இன்னமும் விவாதங்கள் நடந்துவரும் நிலையில், தற்போது அந்த இயந்திரம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த இயந்திரம், தயாரிப்புகள் பாதுகாப்புச் சட்டத்துக்கான விதிகளுக்கு உட்படவில்லை என்று கூறியுள்ள சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Elisabeth Baume-Schneider, அந்த இயந்திரத்தில் நைட்ரஜன் வாயு பயன்படுத்தப்படுவது, சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US