ஒருமுறை சார்ஜ் செய்தால் 248 கிமீ மைலேஜ்.! Simple One-ன் Gen 1.5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
Simple Energy-ன் புதிய Simple One Gen 1.5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தியாளரான Simple Energy அதன் Simple One மின்சார ஸ்கூட்டரின் Gen 1.5 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Simple One Gen 1.5-ன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.66 லட்சம் ஆகும்.
மேம்படுத்தப்பட்ட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 248 கிமீ ஓடும் என்று நிறுவனம் கூறுகிறது. இது முந்தைய தலைமுறை மாடலை (212 கிமீ வரம்பு) விட அதிகமாகும்.
Ola S1 Pro Plus, Ather 450 X மற்றும் TVS iQube ST போன்ற மின்சார ஸ்கூட்டர்களுடன் Simple One போட்டியிடுகிறது.
2026 நிதியாண்டிற்குள் நாடு முழுவதும் 150 புதிய கடைகள் மற்றும் 200 சேவை மையங்களைத் திறக்க உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
simple one gen 1.5 electric scooter