பெருங்குடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்
Apple
Lemon
Ginger
Kidney Disease
Aloe Vera
By Kishanthini
பொதுவாக பெருங்குடல் சுத்திகரிப்பு உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
பெருங்குடலில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் வசிக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் தான் நமக்கு ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
சில சமயங்களில் கழிவுகள் குடலிலயே தங்கி விடலாம். எனவே இதை வெளியேற்றுவது அவசியம். எனவே பெருங்குடலில் உள்ள கழிவுகளை எளியமுறையில் அகற்ற சில எளிய இயற்கை வழிகளை இங்கே பார்ப்போம்.
Image -fondazioneveronesi
- இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை குடிக்கலாம். இல்லாவிட்டால் 2 கப் சுடுநீரில் ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் 1/4 கப் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
- நற்பதமான கற்றாழையின் ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் ஒரு எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். இந்த சாற்றினை 2-3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் நாள் முழுவதும் தேவையான போது குடியுங்கள்.
- ஒரு டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து, அந்நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பின் சிறிது நேரம் தரையில் படுத்து வயிற்றை மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் உடலின் மூலைமுடுக்குகளில் உள்ள நச்சுக் கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படும். இந்த முறையை மாதத்திற்கு 5 முறை வரை செய்யலாம்.
- ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்த ஆளி வியை ஒரு டம்ளர் நீரில் கலந்து, அந்நீரை காலை உணவு உண்பதற்கு மற்றும் இரவு தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் குடிக்க வேண்டும்.
- தயிரில் புரோபயோடிக் என்னும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை செரிமானத்தை ஊக்குவிப்பதோடு, குடல் நோய்களை எதிர்த்துப் போராடும்.
- ராஸ்ப்பெர்ரி, பேரிக்காய், ஆப்பிள் போன்ற நார்ச்சத்துள்ள பழங்களை அதிகம் சாப்பிடுவதோடு, பட்டாணி, ப்ராக்கோலி போன்ற காய்கறிகளையும் அதிகம் சாப்பிடுங்கள். இது தவிர செரில்கள், முழு தானியங்கள், நட்ஸ், பீன்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றையும் சாப்பிடுங்கள்.
- நற்பதமான காய்கறி ஜூஸ்களை ஒரு நாளைக்கு பல முறை குடியுங்கள். இதனால் பச்சை காய்கறிகளில் உள்ள குளோரோஃபில் நச்சுக்களை நீக்க உதவுகிறது.
- ஒரு சிட்டிகை கல் உப்பு மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு 3-4 முறை குடிக்க வேண்டும்.
- நற்பதமான ஆப்பிளை எடுத்து, அதை அரைத்து வடிகட்டாமல் குடியுங்கள். இப்படி 3 நாளைக்கு தொடர்ந்து குடித்து வந்தால், பெருங்குடல் சுத்தமாகும்.
- ஒரு நாளைக்கு குறைந்தது 10-12 டம்ளர் நீரை ஒருவர் குடிக்க வேண்டியது அவசியம். இப்படி தினமும் போதுமான அளவு நீரை குடித்து வந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் சீராக நடைபெறும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US