உங்க வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? இந்த பொருட்களை வீட்டின் இந்த இடத்தில் வைத்தாலே போதும்!
Home
Garden
By Kishanthini
பொதுவாக வாஸ்து பார்க்கும் பழக்கத்தை காலங்காலமாக மக்கள் பின்ற்றி வருகின்றார்கள். வாஸ்து பார்ப்பதினால் நிறைய பலன் கிடைக்கும் என்பது முன்னோர்களின் கருத்து.
வாஸ்து பார்த்து ஒரு சிறு மாற்றத்தை செய்வதன் மூலம் கூட பெரும் பலனை பெறலாம். ஏனெனில் சிறு சிறு மாற்றங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்து, வீட்டில் செல்வ செழிப்பை உண்டாக்குகிறது.
அந்தவகையில் வாஸ்து சாஸ்திரத்தைப்படி எந்தெந்த பொருட்களை வீட்டின் எந்தெந்த இடங்களில் வைத்தால் செல்வ வளம் பெருகும் என்பதை இப்போது பார்க்கலாம்.
- பொதுவாக மீன் தொட்டியை வீட்டின் படிக்கும் அறையில் வைப்பதே சிறந்தது. அதிலும், அறையின் கிழக்கு, வட-கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்திருப்பது மிகவும் சிறந்தது. இதனால் வீட்டில் எப்போதும் அமைதி நிலவும்.
- சிறந்த நறுமணம் மிக்க மலர்கள் அடங்கிய பூந்தொட்டிகளை வீட்டின் படிக்கும் அறையில் வைப்பதன் மூலம் வீட்டில் செல்வ வளம் அதிகரிப்பதோடு, வீட்டின் அமைதியும் மேம்படும். படிக்கும் அறையை காட்டிலும் பூந்தொட்டிக்கு சிறந்த இடம் என்றால் அது வீட்டின் முன் கதவு அருகே வைப்பது தான்.
- வீட்டில் புத்தர் சிலையை வைக்கும் பொதுவான இடங்கள் படிக்கும் அறை, தோட்டம் அல்லது சமையலறை. நாம் வீட்டில் வைக்கும் புத்தர் சிலையின் அளவை பொருத்து நம் வீட்டின் அமைதியின் அளவும் மாறுபடும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
- வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க செய்வதற்கான மற்றொரு வழி என்றால் அது தான் வின்ட் சைம்ஸ். பொதுவாக அனைவரது வீட்டிலும் இதை காண முடியும். இதனை மாட்டுவதற்கான சரியான இடம் வீட்டின் வாசல் தான்.
- ஒரு சில வகை குறிப்பிட்ட ஓவியங்கள் கூட வீட்டிற்கு நல்ல அதிர்ஷடத்தை கொண்டு வரும். அவற்றில் நீர் வீழ்ச்சி ஓவியங்கள், ஓடும் நதி மற்றும் கோல்ட் ஃபிஸ் போன்றவையும் அடங்கும்.
- மணி ப்ளாண்டை அதிர்ஷ்டம் மற்றும் செல்வ வளத்தை ஈர்க்கும். அதிலும், மணி ப்ளாண்டை பச்சை நிற பாட்டில் அல்லது தொட்டியில், வீட்டின் வடக்கு மூலையில் வைத்து வளர்ப்பது செல்வ வளத்தை தரும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US