இடுப்பில் உள்ள கொழுப்பை எளிதில் குறைக்கலாம்; இதோ சில எளிய வழிகள்
பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையை குறைப்பது என்பது கடினமாக விடயமாகும். அதிலும் பலர் இடுப்பில் உள்ள கொழுப்பையும் கையில் உள்ள கொழுபபையும் குறைப்பதில் தான் அதிக ஈடுப்பாட்டுடன் இருப்பார்கள்.
அந்தவகையில் இடுப்பு பகுதியை மெலிதாக்கி, மெல்லிய தோற்றத்தை அடைவதற்கான வழி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இடுப்பு கொழுப்பை எப்படி குறைக்கலாம்?
01. இதயம் சார்ந்த உடற்பயிற்சிகளைச் செய்யவும்
ரன்னிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது நடனம் போன்ற கார்டியோ பயிற்சிகள் செய்வதன் மூலம் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கலாம்.
நல்ல முடிவை பெற வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குறைந்தது 30 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்யலாம்.
02. வலிமை பயிற்சி
வலிமையான பயிற்சிகளை செய்வது தசையை உருவாக்கவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.
ஸ்குவாட்ஸ், ஜம்பிங் ஜாக்ஸ் போன்ற இடுப்பு மற்றும் தொடைகள் சார்ந்த பயிற்சிகளை செய்யலாம்.
03. ஆரோக்கியமான உணவு
இடுப்பு எடையை குறைப்பதற்கு ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதும் சிறந்த தீர்வாகும்.
பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடலாம். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க நாள் முழுவதும் தண்ணீர் குடிக்கவும்.
04. சர்க்கரை உணவை தவிர்க்கவும்
சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். இது இடுப்புக் கொழுப்பை குறைக்கவும் உதவும்.
இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், பயிர்கள் மற்றும் முழு தானியங்களை எடுத்துக்கொள்ளலாம்.
05. தூக்கம்
தூக்கமின்மை உடலில் பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே அனைவரும் போதுமானளவு தூங்க வேண்டும்.
தூக்கமின்மை உங்கள் ஹார்மோன்களை சீர்குலைத்து, இடுப்பு பகுதி உட்பட எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே தினமும் நல்ல தூக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |