உங்கள் தலைமுடி பரட்டை தலைபோல் இருக்கா? இந்த 7 டிப்ஸ யூஸ் பண்ணுங்க
அடர்த்தியான மற்றும் நீளமான முடியைதான் அனைவரும் விரும்புகிறோம்.
பெரும்பலான மக்கள் தினமும் பல்வேறு தலைமுடி பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
குறிப்பாக அதில் வறண்ட முடியும் ஒன்று. பரட்டை தலைபோல் இருக்கும் உங்கள் கூந்தலை பட்டு போல் மென்மையாக மாற்ற ஒரு சில டிப்ஸ்.
மென்மை கூந்தலுக்கான டிப்ஸ்
தலைமுடியை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கவும், ஈரப்பதமூட்டும் ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தவும்.
சூடான நீரில் தலைமுடியை அலச வேண்டாம். தலைமுடி வறண்டு போவதையும், உதிர்வதையும் தடுக்க தலைமுடியை குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
தலைமுடி பராமரிப்பில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பளபளப்பான முடியை பெறவும் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது.
தேவையற்ற முடி உடைப்பு மற்றும் சுருட்டையைத் தவிர்க்க, பரந்த-பல் சீப்பு அல்லது பெரிய பற்கள் கொண்ட தூரிகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தலைமுடி அதிகமாக உலர்த்தப்படுவதைத் தடுக்க சல்பேட் இல்லாத ஷாம்புகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நாளும் தலைமுடியை அலச வேண்டாம் . இதனால் முடி வறண்டு காணப்படும். வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடியை அலசலாம்.
பட்டு அல்லது சாடின் தலையணை உறைகளை பயன்படுத்துங்கள். அவை உங்கள் தலைமுடியை மென்மையாக்குகின்றன. இது முடி சிக்கலாகவும், முடி உதிர்வதையும் தடுக்க உதவும்.
தயிர், தேன் மற்றும் கற்றாழை போன்ற பொருட்களுடன் கூடிய சில ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்தலாம். இவை தலைமுடியை ஈரப்பதமாக்குவதற்கும் மென்மையாக்குவதற்கும் உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |