சுருண்ட முடியாக நேராக மாற்ற வேண்டுமா? எளிய வீட்டு வைத்தியம் இதோ
பலரும் சுருள் முடி பிடிக்காமல் அழகு நிலையங்களுக்கு சென்று செலவு செய்து முடியை நேராக மாற்றிக்கொள்கிறார்கள்.
தலைமுடியின் தோற்றத்தை மாற்றி அமைக்க ரசாயன கலவை கொண்ட பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நமது முடிக்கும் பலவிதமான பாதிப்புகள் உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலேயே இயற்கையான முறையில் சுருண்ட முடியை நேராக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்- 1
- தேன்- 4 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை அரைத்து அதனுடன் தேன் சேர்க்கவும்.
இந்த பேஸ்ட்டை முடியில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு முடியைக் கழுவவும்.
இதனை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யவும்.
2. தேவையான பொருட்கள்
- தேன்- 2 ஸ்பூன்
- தயிர்- 4 ஸ்பூன்
- கிளிசரின்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர் எடுத்து அதனுடன் தேன் சேர்க்கவும்.
அதன் பிறகு கிளிசரின் சேர்த்து கலக்கி இந்த பேஸ்ட்டை முடியில் தடவவும்.
20 நிமிடங்களுக்குப் பிறகு முடியைக் மென்மையான ஷாம்பு கொண்டு கழுவவும்.
இதனை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |