எல்லைகள் மாறக்கூடும்... இந்தியாவுடன் அந்தப்பகுதி இணையும்: பாதுகாப்பு அமைச்சர் சூசகம்
சிந்து பகுதி இன்று இந்தியாவுடன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் எல்லைகள் மாறக்கூடும், அந்தப் பகுதி இந்தியாவுடன் திரும்பக்கூடும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஏற்றுக்கொள்ளவில்லை
1947 ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகு சிந்து நதிக்கு அருகிலுள்ள சிந்து மாகாணம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. ஆனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த சிந்தி மக்கள் இந்தியாவிற்கு வந்தனர்.

இந்த நிலையில், சிந்தி இந்துக்கள், குறிப்பாக எல்.கே. அத்வானி போன்ற தலைவர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், சிந்து பிராந்தியத்தை இந்தியாவிலிருந்து பிரிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிந்தி இந்துக்கள், குறிப்பாக அத்வானியின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், இன்னும் சிந்து இந்தியாவிலிருந்து பிரிவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அத்வானியே தனது புத்தகங்களில் ஒன்றில் எழுதியதையும் குறிப்பிட விரும்புகிறேன் என்றார்.
சிந்து மாகாணத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் சிந்து நதியைப் புனிதமாகக் கருதுகின்றனர் என குறிப்பிட்டுள்ள ராஜ்நாத் சிங்,

இந்தியாவின் ஒரு பகுதி
சிந்து மாகாணத்தில் உள்ள பல இஸ்லாமியர்களும் சிந்து நதியின் நீர் மெக்காவின் ஆப்-இ-சம்ஜத் நீருக்கு ஒப்பானது என்று நம்பியதாக அதிவானி குறிப்பிட்டுள்ளார் என்றார்.
இன்று, சிந்து நிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாகரிக ரீதியாக, சிந்து எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்.

நிலத்தைப் பொறுத்தவரை, எல்லைகள் மாறக்கூடும். யாருக்குத் தெரியும், நாளை சிந்து மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பக்கூடும் எனவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |