இந்திய சமையல் கலைஞர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு: மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா?
தொழிலாளர் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் இந்திய சமையல் கலைஞர்களை பணியமர்த்த சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய சமையல் கலைஞர்களுக்கு அனுமதி
சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில், இந்தியாவில் இருந்து சமையல் கலைஞர்களை பணியமர்த்தி கொள்ள அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் சேவை மற்றும் உற்பத்தி துறைகளில் உள்ள சில வேலைகளுக்கான பணியமர்த்தலையும் அந்த நாட்டு அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது.
பாரம்பரியமாக சிங்கப்பூரில் சேவை மற்றும் உற்பத்தி துறையில் வேலை அனுமதி வைத்து இருப்பவர்கள் சீனா, மலேசியா, ஹாங்காங், தென் கொரியா, மக்காவ் மற்றும் தைவான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.
குறைந்தப்பட்ச சம்பளம்
இந்நிலையில் மனிதவள அமைச்சகம், சிங்கப்பூர் உள்ள உணவகங்களில் பணிபுரிய இந்திய சமையல்காரர்களுக்கான விண்ணப்ப செயல்முறையை வெளியிட்டுள்ளது.
அத்துடன் சிங்கப்பூரின் பாரம்பரியமற்ற ஆதார நாடுகளில் இருந்து ஆட்களை பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள் இது தொடர்பான விண்ணப்பங்களை அமைச்சகத்தின் இணையதளத்தில் செப்டம்பர் 1ம் திகதி முதல் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இவ்வாறு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு கட்டாயம் குறைந்தபட்ச மாத ஊதியமாக 1,23,000 ரூபாய்(sgd 2000) வழங்கப்பட வேண்டும்.
சிங்கப்பூரின் பாரம்பரியமற்ற ஆதார நாடுகளுக்கு(Non-Traditional Sources) கீழ், பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், ஶ்ரீலங்கா, தாய்லாந்து ஆகிய நாடுகள் வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |