பிரித்தானியா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பயண விதிமுறைகளை தளர்த்திய பிரபல நாடு!
சிங்கப்பூரில் பிரித்தானியா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் செப்டம்பர் முதல் ஜேர்மனி மற்றும் புருனே (Brunei) ஆகிய நாடுகளிலிருந்து தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு பயண பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.
அதாவது அந்த நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தாலும், சிங்கப்பூரிலிருந்து அந்த நாடுகளுக்கு சென்றாலும், பயணிகளை முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் அவர்கள் எந்த தனிமைப்படுத்தழும் இல்லாமல் பயணமா செய்யமுடியும்.
இதே திட்டத்தை நாளை (செவ்வாய்கிழமை) முதல் பிரித்தானியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய 8 நாடுகளுக்கு சிங்கப்பூர் அரசு விரிவுபடுத்தியுள்ளது.
இதே திட்டம் வரும் நவம்பர் 15-ஆம் திகதி முதல் தென் கொரியாவுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
இந்தக் கொள்கையின் படி, பயணிகள் புறப்படுவதற்கு முன்பும் வருகைக்கும் முன்பும் அவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, கொரோனா வைரஸுக்கு எதிர்மறையாக சோதனை செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.