பவதாரிணி தனது கணவரை விவாகரத்து செய்யும் முடிவில் இருந்தாரா?- வெளியான தகவல்
மறைந்த பாடகி பவதாரிணி தன் கணவரைப் பிரிய முடிவெடுத்தார் என்பது குறித்தான தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
மறைந்த பவதாரிணி
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி கடந்த வாரம் புற்றுநோய் காரணமாக காலமானார்.
அவரது மரணத்தால் அவரது குடும்பத்தார், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பவதாரிணி மறைவின் போது, தான் இறப்பது அவருக்கு முன்பே தெரியும், குடும்பத்துடன் இதனால் நேரம் அதிகம் செலவிட்டார் என்பது போன்ற சில தகவல்களும் வலம் வந்தன.
அதே போல், பவதாரிணி தனது கணவர் சபரிக்கு விவாகரத்து கொடுக்க இருந்தார் என்பது குறித்தான தகவலும் அதில் ஒன்று.
பவதாரிணியின் விவாகரத்து தகவல்
அதாவது, பவதாரிணி இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தன் கணவர் சபரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்திருந்தது உண்மைதான்.
ஆனால், தன்னுடைய மனைவி பவதாரிணிக்கு புற்றுநோய் என்று தகவல் தெரிந்ததும் உடனே வந்து சந்தித்து பேசியிருக்கிறார் சபரி.
இந்த ஒரு மாதத்தில் அவர்கள் இருவருக்குள்ளும் காதல் இன்னும் அதிகமாகி இருக்கிறது. பவதாரிணியை எப்படியும் காப்பாற்றி விட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்திருக்கிறார் சபரி.
ஆனால், தன் உடல்நிலை குறித்து அறிந்து கொண்ட பவதாரிணி அவரது நன்மைக்காகவே பிரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |