மாதவிடாயால் விடுமுறை எடுத்தாயா? மாணவியிடம் இரக்கமின்றி நடந்த ஆசிரியர்... அதிர்ச்சி சம்பவத்தை அம்பலப்படுத்திய சின்மயி
மாதவிடாயால் ஏற்பட்ட வயிறு வலி காரணமாக ஒரு நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்த மாணவியை ஆசிரியர் ஏன் பள்ளிக்கு வர வில்லை என திரும்ப திரும்ப கேட்டு கொடூரமாக நடந்து கொண்ட விடயத்தை சின்மயி அம்பலப்படுத்தியுள்ளார்.
#MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சினிமா துறையில் பாலியல் புகார்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிர்ச்சியை ஏற்படுத்தின. பல பாலியல் புகார்களை பாடகி சின்மயி அம்பலப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் தற்போது பி எஸ் சீனியர் செகண்டரி பள்ளி மீது பாலியல் சீண்டல்களை சின்மயி ஆதாரத்தோடு வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சின்மயி தனது ட்விட்டரில் பதிவிடுகையில் பிஎஸ் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த 8 ஆசிரியர்கள் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த 8 பேரில் ஒருவர் பெண் குழந்தைகளை தவறாக படமெடுத்துள்ளார். அதிலும் ஒரு மாணவி கூறுகையில் மாதவிடாய் காரணமாக அதிக வயிற்று வலியால் ஒரு நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்துவிட்டேன். மறுநாள் சென்ற போது ஆசிரியர் ஒருவர் ஏன் வரவில்லை என கேட்டார், நான் உடம்பு சரியில்லை என்றேன்.
ஆனால் கேள்வி மேல் கேள்வி நான் மாதவிடாய் விஷயத்தை சொல்லும் வரை விடவே இல்லை.
விடுமுறை பின்னர் அந்த விஷயத்தை சொன்னவுடன், திரும்ப திரும்ப என்னிடம் காரணம் கேட்டு ரசித்தார் என மாணவி கூறியதாக தெரிவித்துள்ளார்.