ஆசை மகள் இறந்து 13 வருடங்கள்! பின்னணி பாடகி சித்ராவின் கலங்க வைக்கும் பதிவு
பாடகி சித்ராவின் மகள் தன்னைவிட்டு பிரிந்து 13 வருடங்கள் ஆகியதால் அவரது நினைவு நாளன்று சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவை பதிவேற்றியுள்ளார்.
பாடகி சித்ரா
இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியாக ‘சின்னக்குயில்’ என அழைக்கப்படும் பாடகி சித்ரா.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி என பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.
மேலும் சுமார் 15,000 மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.
பாடகி சித்ராவின் மகள்
சின்னக்குயில் சித்ராவிற்கு ஒரு பெண் குழந்தை இருந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 14ஆம் திகதி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிர்நீத்துள்ளார்.
தனது தாயாருடன் துபாயுக்கு சென்ற நந்தனா நீச்சல் குளத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் நீரில் மூழ்கி இறந்துள்ளார்.
சித்ராவின் உருக்கம்
இன்றையுடன் மகளை பிரிந்து 13 வருடங்கள் ஆகியதால் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மகள் நந்தனாவை குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "எங்கள் இதயங்கள் நினைவுகளால் நிறைந்துள்ளன. உங்கள் பெயரை பெருமையுடன் பேசுகிறோம். நீ இல்லாமல் வாழ்க்கை சென்றாலும் அது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. எங்கள் அன்பான நந்தனா மோலின் அன்பான நினைவாக...." என்று கூறியுள்ளார்.
இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Our hearts are full of memories.
— K S Chithra (@KSChithra) April 14, 2023
With pride we speak your name.
Though life goes on without you,
it will never be quite the same.
In loving memory of our dearest Nandana Mol.#KSChithra #Nandana pic.twitter.com/xtpOKkf3rE