பிரித்தானியாவில் குரங்குகளுக்காக நடத்தப்பட்ட இசைக்கச்சேரி: வியப்பில் மூழ்கும் மக்கள்!
பிரித்தானியாவில் Barbary macaques என்ற குரங்கு இனம் அழிந்து வருவதை தொடர்ந்து அவற்றின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் அவற்றிக்கு இசை கச்சேரி நடத்தி இனப்பெருக்கத்தை தூண்ட முயற்சித்து இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவில் Stoke-on-Trent உள்ள The Trentham ஏன்ற வனப்பகுதில் Barbary macaques என்ற குரங்கு இனம், வேட்டையாடுதல் மற்றும் கடத்தல் காரணமாக அழிந்து வருகிறது. மொத்தமே 8000 என்ற எண்ணிக்கையிலே Barbary macaques என்ற குரங்கு இனம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் அதன் இனப்பெருக்கத்தை தூண்டி அதன் எண்ணிக்கையை அதிகரிக்க The Trentham வனப்பகுதி அதிகாரிகள் முடிவு செய்து, இசைக் கச்சேரி ஒன்றை நடத்தியுள்ளனர்.
Over the weekend, Monkey Forest had a VERY SPECIAL GUEST ?!
— Trentham Monkey Forest (@Monkey_Forest) February 7, 2022
The monkeys were treated to a LIVE PERFORMANCE from love song legend 'Marvin Gaye' to help boost the monkey love at the forest this mating season ?
Read the full story here: https://t.co/sWUjkuzjgb pic.twitter.com/Hr88bISHhI
இதற்காக வாழ்நாள் சாதனையாளர் போன்ற பல்வேறு விருதுளை பெற்ற பிரபல பழம்பெரும் பாடகர் மார்வின் கயேவை போலவே போலியாக பிரதிபலிக்கும் டேவ் லர்ஜியே என்ற நபரை The Trentham வனத்துறை நிர்வாகம் இந்த வேளைக்கு பணி அமர்த்தியுள்ளது.
டேவ் லர்ஜியேவும் பலம்பெரும் புகழ் மார்வின் கயேவை போலவே தோற்றம், குரல் கொண்டு குரங்குகள் முன் தோன்றி Let's get it on போன்ற பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.இந்த பாடலை கேட்ட குரங்குகளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் தழைத்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதுகுறித்து The Trentham வனத்துறை பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்த வாரம் குரங்குகளின் இனப்பெருக்கத்தை தூண்டும் வகையில் நேரடியாக மார்வின் கயேவின் இசைக் கச்சேரி நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இசைக் கச்சேரியின் போது குரங்குகள் காதல் செய்கைகள் செய்ததாகவும், ஒன்றை ஒன்று தலைவாரி பராமரித்து கொண்டும் இருந்ததாக தெரிவித்தனர். இந்த முயற்சி வெற்றி அடைந்தால் வரும் வெயில் காலத்திற்குள் அதிக குட்டிகளை பெற்ற சாதனையை இந்த பூங்கா பெரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்த வீடியோ வெளியாகி அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது என்வது குறிப்பிடத்தக்கது.