அன்றைய தினம் நடந்தது என்ன? முதன்முறையாக வீடியோவில் பேசிய பாடகி கல்பனா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு பிரபல பின்னணி பாடகி கல்பனா வீடியோ வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளார்.
வீடியோ வெளியீடு
இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பின்னணி பாடகி கல்பனா வசித்து வந்துள்ளார்.
இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு சுயநினைவற்ற நிலையில் அவரை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தூக்க மாத்திரைகளை விழுங்கி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார் என்று கூறினர்.

200 கிராம் தங்க கட்டிகள்.., மாமியார் பிறந்தநாளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் பரிசுப்பொருட்கள் வழங்கிய மருமகள்
இதையடுத்து, அவர் ஆபத்து கட்டத்தை தாண்டியதாக மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியானது.
இதனிடையே பாடகி கல்பனாவின் மகள், தனது அம்மா உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கவில்லை என்றும், தூக்கமின்மை மாத்திரை ஓவர் டோஸ் ஆகியதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு பாடகி கல்பனா வீடிய வெளியிட்டுஎன்ன நடந்தது என்று விளக்கியுள்ளார்.
அவர் பேசிய வீடியோவில், "இந்த வயதில் தான் Phd, LLB உள்பட சில விஷயங்களை படித்து வருகிறேன். என்னுடைய இசை மீது கவனம் செலுத்தி வருகிறேன்.
எனக்கு மன அழுத்தம் அதிகமானதால் தூங்கமுடியாமல் போனது. இதற்கு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற போது இன்சோமேனியா பிரச்சனை இருப்பது தெரிய வந்தது.
இதற்காக மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொண்டதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மயக்க நிலைக்கு சென்று விட்டேன்.
இப்போது நான் நலமுடன் இருப்பதற்கு எனது கணவர் தான் காரணம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |