அவருக்கு என்னை விட வயது குறைவு! வருங்கால கணவர் குறித்த உண்மையை வெளியிட்ட சூப்பர் சிங்கர் புகழ் பாடகி மாளவிகா வீடியோ
பிரபல பாடகி மாளவிகா தனது வருங்கால கணவர் தன்னை விட வயதில் இளையவர் என தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாளவிகா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக உள்ளார்.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர அவை வைரலானது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர், உங்களது வருங்கால கணவர் உங்களை விட இளையவரா? அல்லது நீங்கள் இளையவரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மாளவிகா அவர் என்னை விட ஒரு வயது இளையவர். அவருக்கு 32 வயதாகிறது என்று பதிலளித்துள்ளார்.
Singer Malavika shared about the age difference between herself and her husband . . ??? pic.twitter.com/WtaduQi38b
— Anbu (@Mysteri13472103) October 30, 2021
உங்களை விட வயது குறைவானவரை திருமணம் செய்ய உங்கள் பெற்றோர்களை எப்படி சம்மதிக்க வைத்தீர்கள்? என்று மற்றொரு ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், எனக்கு திருமணம் ஆகாதா என என் பெற்றோர்கள் காத்திருந்தனர்.
நான் ஒருவரை பிடித்திருக்கிறது என்றதும் உடனடியாக சம்மதித்தனர் என்று பதிலளித்தார்.
இது குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.